News Just In

5/17/2022 01:37:00 PM

நாட்டை ஆட்சி செய்வது கோட்டாபய-ரணில் அல்ல! ரோஹினி கவிரட்ன விமர்சனம் !



நாட்டில் இன்று கோட்டாபய ராஜபக்ச அல்லது ரணில் விக்கிரமசிங்க ஆட்சி செய்யவில்லைஎனினும் கறுப்பு நிற குருவியே இன்று நாட்டை ஆட்சி செய்வதாக ஐக்கி்ய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன விமர்சனம் வெளியிட்டுள்ளார்.

பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாடாளுமன்றின் பிரதிசபாநாயகர் பதவி வழங்கப்படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, விரும்பியபோதும், அவருக்கு ஆதரவு வழங்குவதாக கூறிய பொதுஜன பெரமுனவினர் அந்த யோசனையை நிராகரித்துள்ளனர்.

இது பிரதமருக்கு ஏற்பட்ட முதலாவது தோல்வியாகும் என்று ரோஹினி கவிரட்ன குறிப்பிட்டார்.நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, நாடு எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்த்தினார்.

எனினும் அது பிரதி சபாநாயகர் நிலை தொடர்பில் அவரின் விருப்பத்தை நிறைவேற்றமுடியாமல் போனமை குறித்து கவலை ஏற்பட்டுள்ளது என்றும் ரோஹினி தெரிவித்தார்.

இந்தநிலையில் நாட்டில், இளைஞர்களின் போராட்டம் நிறைவடையும் போது இந்த நாட்டின் சனத்தொகையில் 52 வீதம் மற்றும் வாக்காளர்களில் 56 வீதமான பெண்களுக்கு நாடாளுமன்றில் சபாநாயகர் அல்லது பிரதி சபாநாயகர் நிலை கிடைக்கும் வாய்ப்பு ஏற்படவேண்டும் என்று ரோஹினி கோரிக்கை விடுத்தார்.

ரோஹினி கவிரட்னவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண் ஒருவர் நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக தெரிவுசெய்யப்படாமை தொடர்பில் தம்மீது குற்றம் சுமத்தவேண்டாம் என்று குறிப்பிட்டார்.

தாம் ஆளும் கட்சியிலும் இல்லாமல் எதிர்கட்சியிலும் இல்லாமல், பாலம் ஒன்றின் ஆரம்பப் பகுதியில் இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் செனட் சபையின் தமது தாயாரின் மாமியாரான எட்லின் மொனமொரே பிரதி சபாநாயகராக பதவி வகித்தார் அதற்கு பின்னர் பெண் ஒருவர் சபாநாயகராகவோ அல்லது பிரதி சபாநாயகரகவோ தெரிவுசெய்யப்படவில்லை என்று ரணில் சுட்டிக்காட்டினார்.

No comments: