News Just In

4/07/2022 11:02:00 AM

இராணுவம் - பொலிஸாருக்கிடையில் முறுகல் ?


இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படைப் பிரிவின் 4 மோட்டார் சைக்கிள்கள், பாராளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள வீதித் தடையை அண்மித்து நிலை கொண்டிருந்த ஆர்ப்பாட்டக் காரர்களிடையே, தேவையற்ற விதத்தில் சஞ்சரித்த சம்பவம் பாரிய சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.




இந் நிலையில், குறித்த சம்பவத்தின் போது, இராணுவ மோட்டார் சைக்கிள்களில் பயணித்த இராணுவத்தினரை பொலிஸார் மறித்து, எச்சரித்தமை, கைது செய்ய முயன்ற சம்பவங்கள் ஊடாக இராணுவம் மற்றும் பொலிசாரிடையே பரஸ்பர மோதல் ஏற்படும் அபாய நிலைமையை நோக்கி நகர்வுகளை எற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது.

இந் நிலையில் இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரால் சவேந்ர சில்வாவின் கோரிக்கை பிரகாரம், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்கு உத்தரவிட்டுள்ளதுடன் தனது கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந் நிலையில், குறித்த சந்தர்ப்பத்தில் பொலிஸார் செயற்பட்ட விதம் மிகச் சரியானதே என தெரிவித்து பொலிஸாருக்கு ஆதரவாக பொலிஸ் திணைக்களத்துக்குள்ளும், பொது மக்களிடையேயும் ஆதரவு வலுத்து வரும் நிலையில், இராணுவத்தினரை மறித்த பொலிசாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இராணுவ தரப்பு வலியுறுத்தி வருகின்றது. இந் நிலைமையே மோதல் நிலைமையை நோக்கி நகரலாம் என அச்சம் வெளியிடப்படுகின்றது.

No comments: