News Just In

4/07/2022 11:31:00 AM

உயிரியல் மருத்துவ பொறியாளர்களுக்கு ஆளுநரால் நியமனம் வழங்கி வைப்பு!



பைஷல் இஸ்மாயில் -
உலகின் பல நாடுகளில் இலவசக் கல்வி வழங்கப்படுவதில்லை. ஆனால் எமது நாட்டில் வழங்கப்படுகின்ற இலவசக் கல்வியின் மூலம் கிடைக்கின்ற நியமனங்களை ஒரு வேலையாக மட்டும் கருதக்கூடாது. அதன் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் சிறத்த சேவைகளை வழங்கக் கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார்.

தாதியர்கள் மற்றும் கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக
உயிரியல் மருத்துவ பொறியியலாளர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு (06) திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் செலவில் நியமிக்கப்பட்டுள்ள நீங்கள், தன்னிடம் வருகின்ற நோயாளிகளை தாய், தந்தை, சகோதரன், சகோதரி மற்றும் உறவினர்கள் போன்று நடத்த வேண்டும். குறிப்பாக கடமைகளை பாரமெடுக்கின்றபோது தங்களினால் கூறப்படுகின்ற கடமை உறுதிமொழிகளுக்கெற்ப தங்களின் கடமைகளிலும் அதேபோல் இருக்கவேண்டும் ஆளுநர் வலியுறுத்திக் கூறினார்.

இதன்போது கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்க, மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், மாகாண கல்விச் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திஸாநாயக்க, மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் எம்.கோபாலரட்ணம், மாகாண சுகாதாரப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments: