News Just In

4/13/2022 07:02:00 AM

கம்பஹாவில் 17ஆயிரம் லீற்றர் எரிபொருட்களுடன் நான்கு பவுஸர்கள் கைப்பற்றப்பட்டன!

கம்பஹா பமுனுகம, போபிட்டியவில் அமைந்துள்ள வாகன சேவை நிலைய வளாகத்துக்குள் 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு நகரும் தாங்கி ஊர்திகள்(பவுசர்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை வத்தளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் அனுமதி பெற்ற இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்தும் ஒருவருக்கு சொந்தமானவை என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஊர்திகளில் இரண்டு டீசல், ஒரு பெற்றோல் மற்றும் ஒரு மண்ணெண்ணெய் ஊர்திகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றில் முறையே 8,800 லீற்றர் டீசல், 4,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 5,000 லீற்றர் மண்ணெண்ணெய் இருந்தன.

இந்த தொடர்பான வழக்கு இன்று வெலிசர நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது

No comments: