News Just In

3/20/2022 06:46:00 PM

இன்று மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்ற 'தியாகராஜம்' நினைவு மலர் வெளியீடு!

'தியாகராஜம்'  நினைவு மலர் வெளியீடு இன்று (20.03.2022) மு.ப 10.30 மணிக்கு தியாகராஜா அறக்கட்டளை நிறுவனத்தால் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் நடைபெற்றது. கல்வியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள் எனப் பலர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. நவரெட்ணம் அவர்கள் தலைமை வகித்தார்.

மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக கலாபூசணம் கவிஞர் ச. அருளானந்தம் அவர்களும், சிறப்பு அதிதியாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளர் கலாநிதி E.J. சற்குணராஜா அவர்களும் மற்றும் கெளரவ அதிதிகளாக முன்னாள் அரச அதிபர் மற்றும் கல்விப் பணிப்பாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.

வரவேற்புரையை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தமிழ் தேசிய உணர்வுகளை தனது தந்தை தனக்கு சிறுவயதில் இருந்தே ஊட்டி வந்ததாக குறிப்பிட்டார்.

தலைமையுரையை நிகழ்த்திய நவரெட்ணம் தனது உரையில் தியாகராஜா அவர்கள் கல்வியாளராக, கலாச்சார விழுமியங்களை வளர்த்தவராக, அரசியல்வாதியாக, சிறந்த நிர்வாகியாக பல்வேறு தடங்களில் பயணித்தவர். வடக்கு கிழக்கு மாகாண மாகாணப் பாடசாலைகளில் முதன்முதலாக தமிழர் பாரம்பரிய இசைக்குழுவை ஆரம்பித்தவர். பாடசாலைகளில் "இன்னியம் இசை" ஆரம்பித்தது மட்டுமன்றி கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கண்ணியம் இசையை கொண்டுவந்தவர் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், பல்கலைக்கழகத்தில் கற்றதனாலோ என்னவோ தெரியவில்லை கம்மினிசிய கொள்கைகள் கொண்டவராக காணப்பட்டபோதும் தமிழ் தேசிய உணர்வு மிக்கவராக காணப்பட்டார். பேராசிரியர் வித்தியானந்தன் அவர்களால் மேடையில் ஏற்றப்பட்ட 'துரோகிகள்' என்ற நாடகத்தில் நடித்து சிறந்த பெயரும் பெற்றார் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் "தியாகராஜம்" நினைவு மலர் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















No comments: