News Just In

3/20/2022 05:51:00 PM

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் சுபீட்சத்தின் நோக்கு நகர அபிவிருத்தித் திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் விசேட திட்டம் தற்போதுமாவட்ட மட்டத்தில் தற்பொழுது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விசேட திட்டத்தின் கீழ் நகர அபிவிருத்தி, கழிவுப் பொருள் வெளியேற்றம் மற்றும் துப்புரவு ஏற்பாட்டு நடவடிக்கை ராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்கா கொடகேவாவின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரணி மற்றும் வந்தாறுமூலை பகுதியில் நகர அபிவிருத்தி திட்டங்கள் சுமார் நாலு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப் பட்டுள்ளன.

இந்த விஷேட திட்டத்தின் கீழ் ராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் முன்மொழிவு க்கமைய மட்டக் களப்பு வந்தா று மூலை பகுதியில் சுமார் இரண்டு கோடியில் நிர்மாணிக் கப் பட்ட நகர அபிவிருத்தித் திட்டம் இன்று வைபவ ரீதியாக திறந் து வைக்கப்பட்டது .

.இந்த புதிய நகர அபிவிருத்தி திட்டத்தில் புதிய நடைபாதை, பொதுச்சந்தை மற்றும் பயன் தரும் மர நடுகை திட்டம் உட்பட பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மா காண பணிப்பாளர் எல்.ஜே. லியனகே நகர அபிவிருத்தி அதி கார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் எ.எல் .நாசர் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.பற்று குணம்உட்பட பல பிரமுகர்கள் பிரசன்னமா கியிருந்தனர்.

இந்தத் திட்டத்தை திறம்பட நிர்மாணித்த நகர அபிவிருத்தி அதி கார சபையின் அதிகாரிகள் இப்பிரதேச மக்களால் பொன்னா டை போர்த்தியும் மலர் மாலை அணிவித்தும் கௌரவிக் கப்பட் டனர்.

ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில் ;- அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் உலகபயங்கரவாதம் மற்றும் .கொவிட் 1 9 வைரஸ் தொற்றின் தாக்கம் என்பவற்றால் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது இன்று மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருட் களின் விலைவாசி ஏற்றம் உட்பட சகல பிரச்சனைகளுக்கும் விரைவான தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் கூடிய முயற்சிகள் எடுத்து வருகின்றது. எனக்குறிப்பிட்டார்.

(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)








No comments: