News Just In

3/20/2022 07:10:00 PM

"செம்பொருளே செந்தமிழே" நூல் வெளியீட்டு விழா!

மட்டக்களப்பு உப்போடையில் அமைந்துள்ள "துளசி மண்டபத்தில்" சைவப்புலவர் முரு சேமகரன் (கவிஞர் கல்லோடைக்கரன்) அவர்களால் எழுதப்பட்ட "செம்பொருளே செந்தமிழே" எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 25.03.2022 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் திரு.சி.தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாநகர முதல்வர் கெளரவ தி.சரவணபவன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார். சிவயோகச் செல்வன் சாம்பசிவம் அவர்களின் பண்ணிசையுடன் ஆசியுரைகளும் மதிப்புரைகளும் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு உப்போடையை பிறப்பிடமாகக் கொண்ட சைவப்புலவர் முரு சேமகரன் அவர்கள் ஓய்வுபெற்ற கூட்டுறவு பரிசோதகர் ஆவார். தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் இவர் சைவத்தின் மீதும் தமிழ் மீதும் கொண்ட ஈடுபாடு காரணமாக 'மெல்லத்தமிழினி வாழும்', 'புலம்பெயர்ந்தோரின் புலம்பெயரா நெஞ்சங்கள்', 'சித்தவனத்தில் சக்திமயம்' என்ற கவிதை நூல்களை அவுஸ்திரேலியாவில் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்லடி உப்போடை நொச்சுமுனை சித்தி விநாயகர், பேச்சியம்மன், நாகதம்பிரான் ஆலயங்களின் வரலாறும் பெருமைகளும், சிலம்பும் சிலம்பம் என்ற நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுக்கு அனைவரையும் வருகை தருமாறு ஏற்பாட்டு குழுவினர் அன்புடன் அழைக்கிறார்கள்.

No comments: