News Just In

3/23/2022 06:53:00 PM

விடுதியில் தங்கியிருந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட இளவயது ஜோடி!

விடுதியில் தங்கியிருந்து ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தபோது இளவயது ஜோடியொன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது கைதானவர்களிடமிருந்து 10 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொல்காவலை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுக்கு உதவியதாகக் கூறப்படும், மெந்தலந்தயிலுள்ள தங்கும் விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டார். சம்பவத்தில் அலவ்வ, புதிய கொழும்பு வீதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரும், மாத்தறை வளஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த யுவதியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் கேகாலை நகரில் சந்தித்து கொண்டதாகவும் இளைஞன் யுவதியுடன் பொல்காவலை மெந்தலந்த தங்கும் விடுதிக்கு வந்து தங்கியதாகவும் தெரியவந்துள்ளது.

அந்த இளம் யுவதியை தகாத தொழிலில் ஈடுபடுத்தி பெற்றுக்கொண்ட பணத்தில் கொழும்பு பிரதேசத்திற்குச் சென்று ஹெரோயின் எடுத்துவந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் கைதான இருவரும் ஹெரோயினுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹெரோயின் மொத்தமாக விற்பனை செய்ததால் இளைஞனை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்து வருவதாகவும், யுவதியையும் தங்கும் விடுதி உரிமையாளரையும் விசாரணை செய்து வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: