News Just In

3/24/2022 05:51:00 AM

விசேட தேவையுடைய மாணவர்களின் ஆசிரியர்களுக்காக மட்டக்களப்பில் இடம்பெற்ற கலைக்கூறு பயிற்சி செயலமர்வு



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக விசேட தேவையுடைய கல்வி அலகுகளில், நிறுவனங்களில்மாணவர்களை வழிப்படுத்தும், கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகர்களுக்கான கலைகூறு 1 பயிற்சி நெறியானது இரண்டு நாட்களை கொண்ட செயலமர்வாக மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின்சமூக சேவைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினர் இணைந்து நடாத்திய குறித்த இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ பிரதான மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த இரண்டு நாள் பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்விற்குபிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன் கலந்துகொண்டதுடன், குறித்த நிகழ்வில் மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன் உள்ளிட்ட மேலும் பலர் அதிதிகளாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

அத்தோடு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி.ச.கோணேஸ்வரன்,
மாவட்டசெயலகசமூகசேவைஅபிவிருத்திஉத்தியோகத்தர்திருமதி.ச.அமிர்தநாயகி, விசேட தேவையுடைய கல்விஅலகுகள், நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும், கல்விகற்பிக்கும், அலுவலர்கள் உள்ளிட்ட மேலும் பல உத்தியோகத்தர்களும் குறித்த இரண்டு நாள் செயலமர்வுகளிலும் கலந்து கொண்டுள்ளனர்.

குறித்த செயலமர்வில் வளவாளர்களாக சாரண உதவி மாவட்ட ஆணையாளர்களான ஐ.கிறிஸ்டி,கே.குணரெட்ணம்,ஏ.உதயகுமார்,எஸ்.பற்றிக் மற்றும்விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பயிற்றுவிப்பாளரான .டியான் செல்வமலர், சாரண ஆசிரியரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக
போதைப்பொருள் தடுப்புபிரிவின் மாவட்டஇணைப்பாளரும் விசேட தேவையுடைய ஆசிரியர்களுக்கான பயிற்றுவிப்பாளருமான பீ.டினேஸ், உள்ளிட்ட பயிற்றுவிப்பாளர்கள் சிறந்த முறையில் வளவாண்மை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: