News Just In

6/14/2021 09:46:00 PM

பொத்துவில் புத்தொளி மன்றத்தால் கொரோனா நிவாரப்பணி முன்னெடுப்பு...!!


நாட்டில் கொரானா தொற்று நோய் பரவல் காரணமாக, நோய் பரவலைத் தடுக்கும் முகமாக பிரயாணத்தடை மற்றும் யாரும் வெளியிலே செல்லாதவாறு வீட்டில் முடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் தொழிலை இழந்து வருமானமின்றி உணவுக்காக இடர்படுகின்ற மக்களின் உயிர்காப்பு நிலையைக் கருத்தில் கொண்டு பொத்துவில் பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ்க் குடும்பங்களுக்கு உணவு நிவாரணம் வழங்கும் நோக்குடன் பொத்துவில் புத்தொளி மன்ற உறுப்பினர்கள் இரண்டாம் மூன்றாம் கட்ட உலருணவு நிவாரணத்தை அண்மையில் வழங்கி வைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ஏத்தம், குண்டுமடு, கிரவல்குழி, வட்டிவெளி, ஊறணி போன்ற கிராமங்களில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்கு வீடுவீடாகச் சென்று நிவாரணப் பொதிகளை வழங்கி அவர்களது துயர் துடைத்து வருகின்றனர்.

அவ்வாறு தொன்னூறுக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளனர். மேலும் உதவி புரிந்து வருகின்றனர். இதற்கான நிதியை சுவிட்சலாந்தில் வசித்து வரும் திரு. இரா. இராசதுரை அவர்களும் அவருடன் இணைந்து சுவஸில் வாழ்ந்து வரும் புலம் பெயர் தமிழர்களும் உதவியுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பெரும் நன்றிக் கடன்பட்டவர்களாக இம்மக்கள் உள்ளனர்.

மேலும் தொடர்ந்து இடருறும் தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க நிதி தேவைப்படுவதால் நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவ முன்வருமாறு புத்தொளி மன்றத்தின் நிர்வாகிகள் கேட்டு நிற்கின்றனர்.

"பொருள் மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி மிகுந்தவர் காசுகள் தாரீர்...."
மேற்படி கைங்கரியத்தினை பொத்துவில் புத்தொளி மன்ற தலைவர் திரு. த.வசந்தன், செயலாளர். திரு. கோ.சிறிதரன், உபசெயலாளர் திரு.கை.சதீஸ், திரு.அ.ஜெயசங்கர், திரு.லெ.நிரஞ்சன்குமார் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.












No comments: