News Just In

6/20/2021 08:35:00 PM

சுகாதார விதிமுறைகளை மீறி வியாபாரம் இடம்பெற்றால் பதினான்கு நாட்களுக்கு சீல்...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார விதிமுறைகளை மீறி வியாபாரம் இடம்பெற்றால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வியாபார நிலையத்திற்கு பதினான்கு நாட்களுக்கு சீல் வைக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாடளாவிய ரீதியில் அமுலில் காணப்பட்ட பயணத்தடை நாளை திங்கட்கிழமை நீக்கப்படவுள்ள நிலையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் மக்கள் பாதுகாப்பு கருதி விசேட கூட்டம் செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான், செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.றுவைத், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ உயர் அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், வர்த்தக சங்கத்தினர், பள்ளிவாயல் நிருவாகத்தினர், பிரதேச மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வர்;த்தக நிலையங்கள் பயணத்தடை தளப்பட்ட நிலையில் மாலை 6 மணி வரை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகளை மீறி வியாபார நடவடிக்கை இடம்பெற்றால் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கௌ;ளப்பட்டு வியாபார நிலையத்திற்கு பதினான்கு நாட்களுக்கு சீல் வைக்கப்படும்.

சிகையங்கார நிலையம்;, உணவகங்கள் தவிர்ந்த வியாபார நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், உணவகங்களுக்கு உணவுகளை வினியோகம் செய்ய மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அலுவலகத்தினால் நடமாடும் பி.சி.ஆர். பரிசோதனை குழாம் கண்கானிப்பில் ஈடுபடுத்தப்பட்டு சுகாதார விதிமுறைகளை மீறுவோருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பள்ளிவாயல்கள், வாழைச்சேனை பிரதேச சபை மற்றும் வர்த்தக சங்கத்தினால் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் வழங்கல். மக்களின் நடமாட்டம் அதிகாரித்து காணப்படும் இடங்களை கண்காணிக்கும் வகையில் ட்ரோன்; கமெரா மூலம் வீடியோ பதிவு செய்வதற்கு பொலிஸார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், கிராமமட்ட குழுக்கள் பொலிஸாருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

திருமணம், பொது நிகழ்வுகள், ஒன்றுகூடல், விளையாட்டு நிகழ்வுகள் என்பவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மரணம் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் சுகாதார தரப்பினரின் பரிசோதனைகள் இடம்பெற்று அதன் முடிவுகள் பெற்ற பின்னர் மரண வீட்டிற்கு சுகாதார விதிமுறைகளை பேணி மக்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்குபவர்கள் அருகிலுள்ள வியாபார நிலையத்திற்கு செல்வதாயின் நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வியாபாரிகள் நிர்ணய விலையை கட்சிப்படுத்துவதுடன், அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.















No comments: