இதற்கான அறிவுறுத்தல் உரிய வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் மற்றும் பிரதேச கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகளை வழங்கும் செயற்பாடு குறித்த கற்றல் விடுமுறைக்காலத்துக்கு இடையூறாக இருக்கக்கூடாது எனவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, 2020 ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விரிவுரைகள் மற்றும் பகுதி நேர வகுப்புகள் ஆகியவற்றை நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி நள்ளிரவிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: