News Just In

11/29/2020 11:25:00 AM

சவுதிக்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பம்..!!


தொழில்களுக்காக, சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 10 மாத காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வெளிநாட்டு தொழில் வழங்குநர்கள் இடையில் காணப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் தலைமையில், இது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, சவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கையிலுள்ள ஆண் பணியாளர்கள் 60 பேர், சவுதி அரேபியா நோக்கி நேற்றைய தினம் புறப்பட்டு சென்றுள்ளதாக பணியகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: