பெற்ற தாயையே பார்க்காத அர்ச்சுனா சபையில் கஜேந்திரகுமார் எம்.பி

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்தவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றையதினம் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவை மத்திய அமைச்சிடம் வழங்குவது தொடர்பான விவாதம் இடம்பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவிக்க முயற்சித்தவேளை அவரை கருத்து தெரிவிக்க விடாமல் அருச்சுனா குழப்பினார். இதன்போது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அருச்சுனாவில் ஒலிவாங்கியை நிறுத்தினார். இருந்தும் அவர் கூச்சலிட்டு குழப்பியதால் குறித்த விடயத்தை அம்பலப்படுத்தினார்.
அவர் அங்கு மேலும் தெரியவருகையில்,
இவர் பெற்ற தாயாரையே பார்க்கவில்லை. அதற்கு இந்த அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருக்கின்ற வைத்தியர்களே சாட்சி. நான் கதைக்கும்போது நீ கதைக்காதே. குரங்கை கொண்டு வந்து பக்கத்தில் அமர்த்தி இருக்கின்றார்கள். இந்த மடையனை பக்கத்தில் இருத்தியதால் எதுவும் கதைக்க முடியாமல் இருக்கிறது என்றார் என தெரிவித்துள்ளார்
No comments: