News Just In

10/16/2020 09:04:00 AM

கிழக்கு மாகாண பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு!!


கிழக்கு மாகாண பூப்பந்தாட்ட சுற்று போட்டியானது ஐப்பசி மாதம் 30ஆம் மற்றும் 31 திகதிகளிலும் மற்றும் கார்த்திகை மாதம் 01  திகதியும் லண்டன் லேடன் புடவையகத்தின் பிரதான அனுசரணையுடன் சிறப்பாக நடாத்த உத்தேசித்துள்ளது.

இந்த சுற்று போட்டியில் எமது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிகளவான பூப்பந்தாட்ட வீரர்கள் கலந்து கொண்டு இச்சுற்றுப் போட்டியை சிறப்பிப்பார்கள் எனவும் எதிர்பாக்கப்படுகின்றது. 

எனவே, இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வயதெல்லைப்பிரிவுகளை கருத்தில்கொண்டு எதிர்வரும் 23.10.2020ம் திகதிக்கு முன்னர் எமக்கு நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டிகள் பின்வரும் வயதெல்லைப் பிரிவுகளில் நடைபெறும். 
1. 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் -  200/=
2. 15 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் - 250/=
3. 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் - 300/=
4. திறந்த ஆண்கள் ஒற்றையர் - 500/=
5. திறந்த பெண்கள் ஒற்றையர் - 500/=
6. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர் - 500/=
7. 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் - 400/=
8. 15 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் - 500/=
9. 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் - 600/=
10. திறந்த ஆண்கள் இரட்டையர் - 1000/=
11. திறந்த பெண்கள் இரட்டையர் - 1000/=
12. 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் - 1000/=

குறித்த போட்டிகளில் இறுதிச்சுற்றில் முதலாம், இரண்டாம் இடங்களை பெறும் வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும். இத்துடன் இந்த போட்டிகளுக்கான ஊடக அனுசரணையினை எமது VTN News இணையத்தள ஊடக சேவையானது வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நிலவும் தற்போதய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் குறித்த திகதியில் நடாத்த முடியாமல் போனால் சுற்றுப்போட்டி பிற்போடப்பட்டு போட்டிக்கான திகதிகள் ஒவ்வொரு வீரர்களுக்கும் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுழைவு விண்ணப்பங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்துடன் நுழைவுக் கட்டணம் அடங்கலாக எதிர்வரும் 23.10.2013ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும். (எக்காரணம் கொண்டும் இத்திகதிக்கு பின்னரான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) 

மேலதிக தொடர்புகள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் யாவற்றிகும்:- 
1. கே.சற்குணசீலன்,
சத்தியா குரூப் (ஆரைம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்னால்) 
பிரதான வீதி, ஆரையம்பதி-2. 
தொ.பே.இல. 075 2283280, 077 1737283 
மின்னஞ்சல் முகவரி:- seelank1983@gmail.com.

விண்ணப்பபடிவத்தினை பெற்று கொள்ள கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து பெற்று கொள்ளவும்.

No comments: