News Just In

10/16/2020 07:53:00 AM

யாழ்ப்பாணம்- கொழும்பு பேருந்து வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் ஏறி விபத்து!!


யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6.20 மணியளவில் மீசாலைக்கும் புத்தூர் சந்திக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மீசாலையைச் சேர்ந்த கோகுலன் லக்சிகன் வயது 15 என்ற மாணவனே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து முன்னால் சென்ற வாகனம் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில் சிறுவன் துவிச்சக்கர வண்டியில் வீதியை கடக்க முயற்சித்துள்ளான்.

இந்நிலையில் சிறுவனை காப்பாற்ற முயற்சித்த போது பேருந்து வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் ஏறியது இதன்போது சாரதியின் முயற்சியினால் பயணிகள் எதுவிதமான சேதமுமின்றி தப்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: