எனினும் சடலம் அடையாளம் காணப்படாததால், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியிருந்தனர்.
அதன் பின்னர் அதிகளவான மக்கள் வந்து பார்வையிட்டு சென்றிருந்த நிலையில் இறந்த பெண்ணின் மகள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
இதனடிப்படையில், உயிரிழந்தவர் கல்முனை 02 அன்னை வேளாங்கண்ணி வீதியை சேர்ந்து 2 பிள்ளைகளின் தாயான 75 வயது மதிக்கத்தக்க ´சின்னத்தம்பி நேசம்மா´ என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த இடத்திற்கு வருகை தந்த இராணுவத்தினரும் கடற்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருதுடன் சடலம் கல்முனை ஆதார வைத்திறசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு காணப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments: