இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட்மெக்கினன் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதிகலாமதி பத்மராஜா வை இன்று 1 6 மதிய வேளையில் மாவட்ட செயலகத்தில் போருக்குபின்னரான மக்களின் இயல்பு வாழ்க்கை மக்களின் தேவைகள்மற்றும் இந்த சூழ்நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு தேவைகள் பற்றியும் விபரமாக எடுத்துக்கூறிநார்.
இம்மாவட்டத்தில் வறுமைஒழிப்புமற்றும் கணவனைஇழந்துபெண்தலைமைதாங்கும் சுமார் 3 ௦ ஆயிரம் குடும்பங்கள் தமது ஜீபனோபாயத்தினை நடாத்த எதிர்நோக்கும்சவால்களையும் எடுத்துக்கூறி முடிந்தளவு நிலைபேறான வாழ்வாதார உதவிகளையும் வீடில்லாபிரச் சினைக்கு வீட்டுவசதிகளும் இம்மாவட்ட மக்களுக்கு வழங்குமாறும்இத்துடன் போரினால்பாதிக்கப்பட்ட குடும் பங்களுக்கு நிலைபேறான வாழ்வாதாரத் தொழில் பேட்டை களை நிறுவிக்கொடுக்க முன்வருமாறும் கேட்டுக்கொண்டார்
.இதற்றுபதிலளித்த , இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட்மெக்கின்னன் தமது நாடு இலங்கைதிருநாட்டுடன் நல்லுறவினை வளர்த்துக்கொள்ளவே விரும்புகின்றது இதனடிப்படையில் எதிர்காலத்தில் இம்மாவட்ட மக்களுக்கு உதவும் திட்டங்களை முன்னேடுக்குமென்றும் கருத்து வெளியிட்டார்.
இச்சந்திப்பின்போதுமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சனி ஸ்ரீகாந்த் ,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்சசிகலா புண்ணிய மூர்த்தி உட்பட கனேடிய தூதரக அதிகாரிகளும் பிரசன்னமாகியிருந்தனர்.



No comments: