பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனீஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.
இந்தச் சூழலில் சி.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக தொடரப்பட்ட இரு நாட்கள் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
எந்தவித நிபந்தனையுமின்றி வழக்கை முடித்துக் கொள்வதாக பா.டெனிஸ்வரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வழக்கு சுமுகமாக முடிவுக்கு வந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, டெனிஸ்வரன் தரப்பில் வழக்கை மீளப் பெறுவதாக அறிவித்தது.
இந்த கருத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு வழக்கை சுமூகமாக முடித்து தீர்ப்பளித்தது.

No comments: