கடந்த சனிக்கிழமை வவுனியா பெரியகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர், தப்பியோடிய நிலையில் மன்னார் ரயில் நிலையத்தில் தலைமைறைவாகியிருந்தார்.
இதனையடுத்து, குறித்த நபரை பிடிப்பதற்காக உதவிய மூன்று ரயில்வே பணியாளர்களிடம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே, PCR பரிசோதனை பெறுபேறுகளின் அடிப்படையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த நபருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்
அத்துடன், மூடப்பட்டுள்ள மன்னார் ரயில் நிலையத்தை மீண்டும் திறப்பது தொடர்பில் கவனஞ் செலுத்தி வருவதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: