News Just In

9/16/2020 10:18:00 AM

ஜனாதிபதியின் விவசாய புரட்சி!- வெல்லாவெளியில் 25912 ஏக்கரில் நெல்செய்கை பண்ண நடவடிக்கை!!


(காத்தான்குடி லத்தீப்)
நாட்டில் உணவுப்பஞ்சம் எட்டப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜனாதிப கோட்டபாய ராஜபக்ச காட்டிவரும் கரிசனைக்கமைய மட்டக்களப்பு வெல்லாவெளி பிரிவில் 2020 பெரும்போக நெல்செய்கையில் பழுகாமம் கமநல பிரிவில் 7000 ஏக்கரிலும், வெல்லாவெளி கமநல பிரிவில் 11712 ஏக்கரிலும், மண்டூர் கமநல பிரிவில் 7200 ஏக்கரிலுமாக 25912 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் இந்த அடிப்படையில் நீர்ப்பாசனம், உரமானியம், பெற்றுகொடுக்கவும் இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட தமிழ்தேசியகூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வெல்லாவெளி உதவிப்பிரதேச செயலாளர் செல்வி ராகுலநாயகி, விவசாய விரிவாக்கல் பிரதிப்பணிப்பாளர். வீ.பேரின்பநாயகம், மத்திய நீர்ப்பாசன மாவட்டப்பணிப்பாளர் கே.நாகரத்தினம், தேசிய உரசெயலக உதவிப்பணிப்பாளர் எஸ்.சிராஜூன், வனஜீவராசிகள் திணைகளத்தின் உதவிப்பணிப்பாளர் எஸ்.சுரேஷ், உட்பட பல அரசதிைணக்களங்களின் பிரதேசதலைவர்கள், விவசாய அமைப்புக்களின்பிரதிநிதிகள் பலரும்பிரசன்னமாகியிருந்தனர்.

இப்பிரிவில் பழுகாமம் கமநல பிரிவில் 7000 ஏக்கரிலும் வெல்லாவெளி கமநல பிரிவில் 11712  ஏக்கரிலும் , மண்டூர் கமநல பிரிவில் 7200 ஏக்கரிலுமாக 25912 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்வதென இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் இந்தன் அடிப்படையில் நீர்ப்பாசனம், உரமானியம், பெற்றுகொடுக்க இக்கூட்டத்தில் சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் செய்யப்பட்டது.

மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா இங்கு கருத்து வெளியிடுகையில் இந்த நாட்டில் உணவுப் பஞ்சம் எட்டப்பட்டு விடக்கூடாது என்பதில் ஜனாதிப கோட்டபாய ராஜபக்ச மிகவும் கரிசனை கொண்டு நாட்டின் விவசாயத்துறையில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். இதற்கமைய 2020 இப்பெரும்போக நெல்செய்கைக்கு மானிய உதவியில் வழங்கப்படும் உரம் உரிய வேளைக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. 

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மானிய உரத்தினை உரிய வேளைக்கு பெற்றுக் கொள்ள வேண்டுமென்று மட்டக்களப்பு மாவட்டஅரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா நேற்று முன்தினம் (2020.09.14) மாலை மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்ற இப்பிரதேச பயிர்ச்செய்கை ஆரம்பகூட்டத்தில் தெரிவித்தார்.













No comments: