News Just In

6/22/2026 05:30:00 PM

மட்டக்களப்பில் ஒளவை விழா!

மட்டக்களப்பில் ஒளவை விழா


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகச் சிறந்த பெண் புலவராகவும், தமிழ் மொழியின் அடையாளமாகவும் போற்றப்படுகின்ற ஒளவையாருக்கு மட்டக்களப்பில் மாபெரும் விழா எடுத்து நினைவு கூரப்பட்டது.

கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் ஒளவை அவையினால் இந்நிகழ்வு மட்டக்களப்பு பாலத்திற்கு அருகிலுள்ள ஒளவையார் சிலை முற்றத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் தலைவர் கதிரவன் ரீ. இன்பராசா தலைமையில் நடைபெற்ற ஒளவையார் நினைவுப் பெரு விழாவில் அரச அலுவலர்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கான விவாதப் போட்டிகள், மாணவர்களின் கலை நிகழ்வுகள்;, அதிதிகள் உரை ஆகியவையும், ஒளவை விழா சிறப்பு மலர் வெளியீடும், கௌரவிப்புக்களும், பரிசளிப்புக்களும் இடம்பெற்றன.

நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறீநேசன், இளையதம்பி சிறீநாத், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், சட்டத்தரணி பேராசிரியர் எஸ்.டீ. கலையமுதன், இந்தியா - புதுடில்லி கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் பன்னாட்டு பாவலர் பி. குமார், தென்னிந்தியப் பாடகர் ஜெய் கிருஷ் உட்பட இன்னும பல அதிகாரிகளும், அலுவலர்களும், இலக்கிய ஆர்வலர்களும், மதப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

No comments: