
இலங்கையின் 14 மாவட்டங்களில் உள்ள 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை டெங்கு உயர் அபாய மண்டலங்களாக அறிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, மேற்கு மாகாணம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில், கொழும்பு மாநகர சபை பகுதியில் உள்ள மகரகம, பிலியந்தல, ஹோமாகம, கடுவலை, பொரலஸ்கமுவ, தெஹிவளை போன்ற பல பிரிவுகள் உயர் அபாய மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, சீதுவ, களனி, ராகமை, மினுவாங்கொட, நீர்கொழும்பு, பியகம, வத்தளை, கந்தானை மற்றும் மஹர ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளும் இந்த அதிக ஆபத்துள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம, ஹொரண, இங்கிரிய, மத்துகம, பாணந்துறை, வாதுவ, களுத்துறை மற்றும் பயாகல ஆகிய பிரதேசங்கள் இந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மேலும், காலி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், பதுளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள கிராம பிரிவுகளும் இந்த அதிக ஆபத்துள்ள பட்டியலில் உள்ளடங்குவதாக கூறுகின்றது.
No comments: