இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அருளேந்திரன் வினோத் அவர்கள் ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் மீன்வள மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
2020.02.22 அன்று இடம்பெற்ற ஐந்தாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பிரதேசத்தில் அதி கூடிய வாக்குகளை பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இவரது கல்வித் தரம், சிறந்த ஆளுமையான தலைமைத்துவம், நேர்முக தேர்வில் வெளிப்படுத்திய ஆற்றல் என்பவற்றின் அடிப்படையில் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை, கிண்ணையடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாவும் கொண்ட இவர் வெண்ணிலா இளைஞர் கழகத்தின் தலைவர், பிரதேச இளைஞர் கழக சம்மேளத்தின் தலைவர், மாவட்ட இளைஞர் கழக சம்மேளத்தின் பொருளாளர் போன்ற பதவிகளை வகித்ததோடு, இந்திய நாட்டிற்கான இலங்கையின் இளைஞர் பிரதிநிதியாகவும் இளம் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு பல உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனாகிய இவர், தற்பொழுது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் சமூக விஞ்ஞானத்தில் பட்ட படிப்பை தொடர்வதுடன், இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கம், மாவட்ட மாதிரி ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல உள் நாட்டு, வெளி நாட்டு தொண்டு நிறுவனங்களின் மாவட்ட, பிரதேச இணைப்பாளராகவும் உறுப்பினராகவும் செயற்பட்டு வருவதுடன் சிறந்த இளம் சமூக சேவையாளராகவும் செயற்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: