News Just In

9/24/2020 06:14:00 AM

2020 ஐபிஎல்தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றி பாதைக்கு திரும்பியது மும்பை!!


அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 5வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்  பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி இருபது ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்களை குவித்திருந்தது. 54 பந்துகளில் 80 ரன்களை குவித்தார் கேப்டன் ரோகித் ஷர்மா. அவருக்கு உறுதுணையாக சூர்யகுமார் யாதவ் 47 ரன்களை குவித்திருந்தார்.

கொல்கத்தாவுக்காக இளம் வீரர் ஷிவம் மாவி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 196 ரன்களை விரட்டிய கொல்கத்தாவுக்கு ஆரம்பமே ஏமாற்றமாக அமைந்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில் மற்றும் சுனில் நரைன் ஏமாற்ற கேப்டன் தினேஷ் கார்த்திக் 30 ரன்களை குவித்து அவுட்டானார். கொல்கத்தா அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுப்பார் என எதிர்ப்பார்க்கப்பட ரஸ்ஸல் 11 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார்.

மோர்கன், நாயக், என அனைத்து பேட்ஸ்மேன்களும் ஏமாற்ற கோலத்தை அணி வெறும் 146 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. 

பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஆல் ரவுண்ட் பர்பாமன்ஸ் கொடுத்து நடப்பு ஐபிஎல் சாம்பியன் அணி என்பதை நிரூபித்துள்ளது மும்பை.

No comments: