News Just In

5/12/2020 12:25:00 PM

மக்களின் செயற்பாடு மகிழ்ச்சியளிக்கவில்லை! எச்சரிக்கும் பிரதி பொலிஸ் மா அதிபர்!!


இலங்கையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் நடவடிக்கைக்கு மக்களின் பங்களிப்பை பார்த்து மகிழ்ச்சியடைய முடியவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சில சந்தர்ப்பங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காமல் மக்கள் செயற்படுவதனை காண முடிந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக இடைவெளியுடன் செயற்படுவது தொடர்பிலான மக்களின் அவதானம் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

வாகன போக்குவரத்தின் போது நேற்று சிக்கல் நிலைமை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் இந்த நிலைமை தொடர்பில் கடுமையாக செயற்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அதற்காக சிவில் ஆடையில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: