News Just In

5/12/2020 12:04:00 PM

கொரோனா சிகிச்சை நடவடிக்கைகளுக்கு மேலும் 3 ரோபோக்கள் அன்பளிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 3 ரோபோ இயந்திரங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள தனியார் நிறுவனமொன்று இவ்வாறு மூன்று ரோபோ இயந்திரங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிடம் கையளித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, மருத்துவ துறைக்கு உதவும் வகையில் இவ்வாறு ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மேம்படுத்தப்பட்ட இந்த ரோபோக்கள் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை மற்றும் களுபோவில போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் பயன்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன

குறித்த ரோபோக்கள் மூலம் நோயாளியின் வெப்பநிலை தரவுகளை பெற முடியும் என்பதுடன், உணவு மற்றும் மருந்துகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான செயற்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ரோபோ இயந்திரங்கள், ஹோமகாம ஆரம்ப வைத்தியசாலை மற்றும் இரணவில வைத்தியசாலை என்பவற்றுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

No comments: