(மட்டக்களப்புமொகமட் தஸ்ரிப் லத்தீப்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலர் பிரிவில் கல்விச் சேவை பணியில் ஈடுபட்ட ஈடுபட்டு பதவி உயர்வு பெற்றுச் செல்லும் உத்தியோக த்தர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தில்(22) நடைபெற்றது .
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக பிரதி வலயக் கல்விப் பணிப்பாளர்திருமதி.எஸ். ரவி ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரக்குமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாராட்டு பத்திரங்களையும் அன்பளிப்புகளையும் வழங்கி வைத்தார்.
மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த விசேட நிகழ்வில் வல யக்கல்வி அலுவலகத்தின் உதவி பணிப்பாளர்கள் அடங்களாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் பலரும் பிரசன்னமாக இருந்தனர்.
இதன்போது இலங்கை கல்வி சேவை தரம் மூன்று ஆரம்பக்கல்வி உதவிப் பணிப்பாளர்உமா விவேகானந்தன் கல்வி சேவை தரம் இரண்டுக்கு பதவிஉயர்வு பெற்று மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அலுவலகத்துக்குசெல்வதனையிட்டு சேவை நலன் பாராட்டப்பட்டது.
அத்துடன் முகாமைத்துவ சேவை உத்தியோகத் தரராக கடமை யாற்றி காத்தான்குடி நகரசபையின் நிருவாக உத்தி யோகத் தராக பதவிஉயர்வு பெற்று இடமாற்றம்பெற்றுச் செல்லும் திருமதி ரினோசாமுப்லி மற்றும் முறைசாரா கல்வி ஆசிரிய ஆலோ சகராக கடைமையாற்றி ஓய்வுபெற்றுச்செல்லும் எஸ்.மோகனதாஸ் ஆகி யோருக்கும் சேவை நலன் பாராட்டுதலும் இடம்பெற்றமை குறுப்பிடத்தக்கது.
No comments: