News Just In

4/27/2024 08:53:00 PM

கல்வி மற்றும் சமூகப்பணியில் 33ம் ஆண்டிற்குள் காலடி வைக்கும் கல்வி அபிவிருத்திச் சங்கம்!


கல்வி அபிவிருத்தி சங்கம்   கல்வி மற்றும் சமூகப் பணிகளில் தற்போது 33ம் ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கிறது. 1992-05-02 அன்று முதன்முறையாக கல்வியை விருத்தி சங்கம் என்ற பெயரில் (O/L) மாணவர்களுக்கான இலவச வகுப்புகளை ஆரம்பித்தது.அன்று முதல் இன்று வரை கல்வி பணியுடன் சமூகப் பணியையும் ஆற்றி வருகிறது.

இப்பாரியபணியில் ஆரம்ப காலத்தில் புலம்பெயர்ந்த தேசங்களில் வாழும் எம்மவர்களின் நிதி பங்களிப்பு பாரியது. இதனை கனடாவில் இருந்து நெறிப்படுத்திய பொன்.சுபேந்திரா, டென்மார்க்கிலிருந்து ஒருங்கிணைத்த வைரமுத்து ஜினேந்திரன் ஆகியோரின் பணி பாராட்டுதற்குரியது. இவற்றுக்கு அப்பால் Vithu Trust Fund(UK),CTCT(Canada) என்பவற்றுடன் Dr.மகேஸ்வரன்(UK) அவர்களின் பங்களிப்பும்எமது  சங்கத்தின் வளர்ச்சிக்கு உரமூட்டியது.


2000ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மாணவர் பராமரிப்பு செயற்பாடானது இவ்வாண்டை வெள்ளிவிழா ஆண்டாக கொண்டாடுகிறது. சங்க பராமரிப்பிலிருந்து கல்வி கற்ற பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்கள் நாட்டின் பல பாகங்களில் மட்டுமன்றி கடல் கடந்த நாடுகளிலும் இன்று பரந்து உள்ளனர்.

சங்க விடுதியில் தங்கி இருந்து கல்வி கற்ற மாணவர்களில்
வைத்தியர்கள் -0 2
பொறியியலாளர்கள் -10
தாதியர்கள் -17
ஆசிரியர்கள் -32
தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் -07
விரிவுரையாளர்கள் -02
சித்த வைத்தியர் -04
ஏனைய அரசு துறையில் -33
மொத்த அரசு துறையினர் -117
தனியார் துறை- 62
பட்டதாரிகள் -130
UK -05
அமெரிக்கா -01
ஆஸ்திரேலியா -04
ஜப்பான் -01
சிங்கப்பூர் 02
கனடா-02
துபாய் -0 1
என தொழில் புரிவதாக பழைய மாணவர் சங்க குறிப்புகள் தெரியப்படுத்துகின்றது.
கல்வியுடன் மட்டுமின்றி எமது மாணவ மாணவிகள் விளையாட்டு துறையிலும் மாகாண மட்டம் மட்டுமின்றி தேசிய ரீதியிலும் பல சாதனைகளை படைத்துள்ளமை பாராட்டுதற்குரியது. இதற்கு பங்களிப்பு செய்த எமது ஆசிரியர்களுடன் எமக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கிய மாணவர்களின் பெற்றோர்களும் பாராட்டுதலுக்குரியவர்களே!


யுத்தம் நிலவிய காலப்பகுதியில் எமது கல்விச்சங்க வளர்ச்சிக்கு பலர் நமது பூரண ஒத்துழைப்பை வழங்கினர்.அவர்களில் முதன்மையானவராக காலம்சென்ற கதிரமலை சந்திரகாசன் அவர்கள் என்றால் மிகை ஆகாது. எமது மாணவர்களின் ஆங்கில அடைவு மட்டத்தை உயர்த்துவதற்காக தமது ஒத்துழைப்பை வழங்கிய Headway நிறுவனமும் அதன் பணிப்பாளரான M.நரேந்திரன் அவர்களும் பாராட்டுதற்குரியவராவார்.

தற்போது எமது அமைப்பு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தாலும் நமது பழைய மாணவர்கள் தமது ஆதரவு கரத்தினை நீட்டி உள்ளமை எமது கல்விச் சங்கம் மேலும் வளரும் என்பது திண்ணம்.

பழைய மாணவர் சங்க செயலாளர்  .

No comments: