News Just In

4/28/2024 10:12:00 AM

சாய்ந்தமருதில் கிராமிய விளையாட்டு விழா!



நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி, சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு மற்றும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு ஸ்மார்ட் யூத் கிராமிய விளையாட்டு விழா சாய்ந்தமருது பௌசி விளையாட்டு மைதானத்தில் மிக விமர்சையாக (27) சனிக்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம் எம் ஆஷிக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி. ஜெகதீஸன், மற்றும் அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.ஏ. சி. அஹமட் சாபிர் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இதில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா, சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.ஏ. நஜீம், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ. மஜீத், சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.எஸ்.ஹிதாயா, சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் எஸ். றிபாயா, சமுர்த்தி வங்கி உதவி முகாமையாளர் எம்.யூ.ஹில்மி, வலய உதவி முகாமையாளர் எம். எஸ்.எம். நெளஷாத், இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஸமீலுல் இலாஹி உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டு அதிகாரிகள், இளைஞர் சேவைகள் சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கிராமிய விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.

No comments: