News Just In

1/07/2026 06:42:00 PM

உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்

உதவிப் பிரதேச செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றார் ஏ.எஸ்.எம். அஸீம்



நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராக கடமையாற்றி வந்த ஏ.எஸ்.எம். அஸீம், அம்பாறை மாவட்ட உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ஏ.எஸ்.எம். அஸீம், அரச நிர்வாக சேவையில் அனுபவம் கொண்ட திறமையான நிர்வாக அதிகாரியாக அறியப்படுகிறார். இதற்கு முன்னர் அவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிரதிச் செயலாளராகவும், கல்முனை மாநகர சபையின் உதவி ஆணையாளராகவும் பணியாற்றி, பொது சேவையில் தனது திறமையான மற்றும் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்கியுள்ளார்.

பல்வேறு துறைகளில் பெற்ற நிர்வாக அனுபவமும், மக்களுடன் நெருக்கமாக செயல்படும் திறனும் கொண்ட ஏ.எஸ்.எம். அஸீம், உகண பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவரது புதிய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments: