News Just In

5/12/2020 01:07:00 PM

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் இலவசமாக நீதிமன்றில் வாதாட முன்வந்திருப்பது...-றவூப் ஹக்கீம்


-ஏ.எச்.ஏ. ஹுஸைன் 
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இலவசமாக நீதிமன்றில் வாதாட முன்வந்திருப்பது நியாயம் கேட்டுப் போராடும் இனங்களுக்கிடையிலான உணர்வை வலுப்படுத்துகின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் காணொளியொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தக் காணொளியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. அண்மைக் காலமாக முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை எரிப்பது சம்பந்தமாக இந்த அரசாங்கம் ஒரு பிடிவாதப் போக்கோடு நடந்து கொள்கின்ற நிலையில் இந்த விவகாரத்தை நீதிமன்றம் சென்று அதை சவாலுக்குட்படுத்துகின்ற முயற்சியில் ஒரு சில சகோதரர்கள் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸும் இந்த விவகாரத்தைத் தன்னுடைய கையிலே எடுத்திருக்கின்றது.

அதே நேரம் இந்த வழக்கொன்றில் எங்களுடைய நண்பன் சகோதரர் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் முன்வநச்து எந்த ஊதியமும் பெறாமல் வழக்கிலே ஆஜராவதற்கு தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில் வேண்டுமென்று எமது கட்சிக்கு எதிரான ஒரு சாரார் தங்களுடைய வங்குரோத்து அரசியலை அடிப்படையாக வைத்து நான் நண்பன் சுமந்திரனை இந்த விவகாரத்தில் தலையிடுகின்ற விசயத்தை விமர்சித்ததாகச் சொல்லி ஒரு முகநூல் பதிவொன்றை போலியாக இட்டிருப்பது அவர்களுடைய வங்குரோத்து நிலைமையைக் காட்டி நிற்கின்றது.

நண்பர் சுமந்திரன் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸோடு நெருங்கிய உறவைப் பேணி வருகின்ற ஒரு அரசியல் வாதி மாத்திரமல்ல தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் பல விவகாரங்களில் குறிப்பாக சிறுபான்மை இனங்கள் சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும் இந்த நாட்டு அரசியலிலே எம்மவர்களுக்கு எதிராக எப்படியான சலவால்கள் வந்தாலும் இயன்றவரை நாங்கள் ஒன்றாக இருந்து போராட வேபண்டும் என்ற கொள்கையிலே பயணிப்பவர்கள்

இந்த நிலையில் சகோதரர் சுமந்திரன் அவர்கள் எடுத்திருக்கின்ற இந்த முயற்சியை நாங்கள் எல்லோரும் மனதாரப் பாராட்ட வேண்டுமேயொழிய இவ்வாறு கீழ்த்தரமாக தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸை மலினப்படுத்துவதற்காக செய்கின்ற இவ்வாறான செயற்பாடுகள் குறித்து நான் என்னுடைய கண்டனத்தைத் தெரிவிப்பது மாத்திரமல்ல இதை ஆரம்பத்திலே வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவன் என்ற அடிப்படையிலே இது சம்பந்தமாக நாங்களும் நீதிமன்றம் கொண்டு சென்று அதனூடாக நியாயம் கேட்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் தன்னைத் தயார்படுத்தி அதற்கான வேலைகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றது.

இந்த விசயத்தில் நண்பர் சுமந்திரன் அவர்கள் முன்வந்து எந்த வழக்குக் கூலியும் பெறாமல் ஒரு வழக்கறிஞராக வாதாட வந்திருப்பது எம்மிரு சமூகங்களுக்கிடையில் இருக்கின்ற சகோரத்துவ உணர்வை மாத்திரமல்ல நியாயம் கேட்டுப் போராடுகின்ற விவகாரத்திலே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவதற்குத் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை உரத்துச் சொல்லுகிறது.

எனவே இந்தப் பின்னணியிலே முஸ்லிம்களும் தமிழர்களும் மாத்திரமல்ல நியாயமாகச்  சிந்திக்கின்ற பௌத்தர்கள் சிங்களவர்கள் கூட முஸ்லிம்களுடைய உணர்வு ரீதியான இந்த விவகாரத்திலே அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற இந்த அநியாயத்தைக் குறித்து ஒன்றாகக் குரலெழுப்ப வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது.

இந்த விசயத்திலே நீதிமன்றம் ஊடாக நியாயத்தைப் பெறுகின்ற விவகாரத்திலே ஸ்ரீலங்கா முஸ்லிம் கொங்கிரஸும் முழமையாகத் தன்னை ஈடுபடுத்தி இருக்கிறது.

அந்த வழக்குகளிலே நாங்களும் பங்கு கொள்கின்றோம் என்பதையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும்.

இந்த நிலையில் சகோதரர் சுமந்திரனை நான் விமர்சிப்பதாக போலியான செய்திகளைப் பரப்புகின்ற இந்த அரசாங்கத்தோடு ஒட்டியிருக்கின்ற ஒரு சில ஒட்டுண்ணிக் கட்சிகள் தங்களுடைய வங்குரோத்து அரசியலுக்கு வேறு வழியில்லாமல் இப்படித் தங்களுடைய இயலாமையை மறைப்பதற்காகச் செய்கின்ற இந்த ஈனச் செயலையிட்டு நான் கவலைப்டுகின்றேள்.' என்று தெரிவித்துள்ளார்.

No comments: