இது தொடர்பில் அவ் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவிக்கையில்,
கடந்த 2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் தினத்தன்று மதவெறி கொண்ட மனித மிருகங்களால் நடாத்தப்பட்ட ஈனத்தனமான தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளுக்காக நினைவு கூருவோம்.
மரித்த இயேசுபிரான் உயிர்த்த நாளில் எம் உறவுகளை எலும்பும் சதையுமாக வேட்டையாடிய நரபலியாளர்களை ஈனத்தனமானவர்கள் என்றும், அவர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் நாளை ஈனப்படுகொலை நாளாகக் கருதி எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி கொல்லப்பட்ட எமது உறவுகளை நினைந்து எம் ஒவ்வொருவரினதும் வீட்டு வாசல்களில் நினைவுச் சுடரேற்றிடுவோம் என்று தெரிவித்தார்.


No comments: