மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலை அபயம் அமைப்பு, சர்வோதயம், யாழ் இந்துக்கல்லூரியின் 1996ஆம் ஆண்டு பழைய மாணவர்கள், பட்டிப்பளை சுகாதார வைத்திய அலுவலகம் மற்றும் நண்பர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த கோவிட் 19 அனர்த்த நிவாரணப் பணியானது இன்று 19.04.2020 வாகரைப் பிரதேசத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களான காயங்கேணி, கட்டுமுறிவுக்குளம், ஆண்டான்குளம் கிராமங்களில் இடம்பெற்றது.
வாகரைப்பிரதேச செயலகத்தின் நேரடி வழிகாட்டலில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வாகரை உதவிப்பிரதேச செயலாளர் திருமதி அமலினி, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் திரு சுதாகரன் ஆகியோருடன் பிரதேசசபை ஊழியர்கள், கிராமசேவகர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தினர் கட்டுமுறிவு தமிழ்கலவன் பாடசாலை சமுகத்தினர் போன்றோர் கலந்துகொண்டனர்.
யாழ் இந்துக்கல்லூரி 1996ஆம் ஆண்டு அணியின் பழைய மாணவர்களால் 3லட்சம் பெறுமதியான 150 உலர் உணவுப் பொதிகள் காயங்கேணி பிரதேச மக்களுக்கும், அபயம் அமைப்பு, சர்வோதயம், மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலை, பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் நண்பர்களால் வழங்கிவைக்கப்பட்ட 6 லட்சம் பெறுமதியான 300 உலர் உணவுப் பொதிகள் கட்டுமுறிவுகுளம், ஆண்டான்குளம் பிரதேசத்திலுள்ள 300 குடும்பத்தினருக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி தவநேசன், வைத்திய கலாநிதி கீதாஞ்சலி, பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி திருமதி கலையரசி துரைராசசிங்கம், மட்டக்களப்பு சர்வோதயக்கிளையின் பணிப்பாளர் திரு ஹரிம் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய கலாநிதி கிரிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.














No comments: