பிரதான வாய்க்காலில் நீர் குறைவாக திறக்கப்படுவதனால் ஏனைய வாய்க்கால்களில் ஊடாக செல்லும் நீர் விநியோகம் தடைப்படுள்ளது.
இதனால் குறித்த வாய்க்கால்களின் மூலம் நீரினை பெற்று வேளாண்மை செய்கை பண்ணப்படும் வயல் பிரதேசம் நீரின்றி வறண்டு காணப்படுகிறது.
விநியோகப்படும் நீரினை பிரதான வாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள விவசாயிகள் போதியளவு பெற்றுள்ளனர். ஏனைய விவசாயிகளுக்கு குறித்த நீர் சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடள் நீர் சென்றடையவும் இல்லையெனவும் விவசாயிகளுக்கிடையிலே முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டு குழப்ப நிலை காணப்படுவதாக தெரிவிக்கின்றனார்.
குறித்த காலத்தில் வழங்கப்படும் நீர் வேளாண்மையின் பருவ வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இவ் அவல நிலைமைக்கு தங்கள் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் பொருத்தமற்ற நிர்வாக செயற்பாடே காரணம் என்றும் இவர்களின் இவ்வாறான செய்ற்பாடு பல தடவைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயம் தொடர்பாக செங்கலடி நீர்ப்பாசன திணைக்களம் முன்வந்து நிலைமையை சீர் செய்து விவசாயிகளை குறித்த ஆபத்தில் இருந்து காப்பாற்றுமாறு கேட்கின்றனர்


No comments: