
மட்டக்களப்பு, நாவற்குடா- மாநகர சபை சுத்தானந்த பாலர் பாடசாலை புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(31) மாநகர ஆணையாளர் க.சித்திரவேல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் தி.சரவணபவன், கௌரவ அதிதிகளாக மாநகர ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபை உறுப்பினர் அ.கிருரஜன், முன்பள்ளி பாடசாலை பெறுப்பாளர் ரி.மேகராஜ் ஆகியோரும்
பாலர் பாடசாலை மேம்பாட்டு குழு அங்கத்தவர்கள், அதிபர் திருமதி சுந்தரமதி வேதநாயகம், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்.
அதிதிகள், மாணவர்கள் வரவேற்பு, மாணவர்களின் கலை நிகழ்வுகள், அதிதிகள் உரை, இனிப்பு வழங்குதல், சான்றிதழ் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.


























No comments: