-லியோன்-
மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் சுகாதார அமைச்சி விழிப்புணர்வு அறிவூட்டல்களை வெளியிட்டும் நடவடிக்கையினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றது .
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான அச்ச உணர்வை போக்கும் வகையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் இதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது
குறித்த சிகிச்சை பிரிவு தொடர்பாக ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது .
இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சிகிச்சை பிரிவு தொடர்பாக கருத்து தெரிவித்த பணிப்பாளர் கிழக்கு மாகாணத்தின் கேந்திரமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு ஆரம்பிக்கப்பட்டு அதற்கான முன்னாயத்த நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவே மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி கே . கலாராணி தெரிவித்தார்.
1/31/2020 10:27:00 PM
Home
/
உள்ளூர்
/
போதனா வைத்தியசாலை
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு ஆரம்பம்!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு ஆரம்பம்!
Subscribe to:
Post Comments (Atom)










No comments: