News Just In

1/26/2020 09:57:00 PM

எல்லைக்கிராமமான சின்னவத்தையின் கல்வி அபிவிருத்தி நடவடிக்கையில் சாணக்கியன்


எல்லைக்கிராமமான போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் 2016ம் ஆண்டு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் அமைக்கப்பட்ட பிரத்தியேக கல்வி நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பாக அக்கிராமத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் விஜயம் செய்து அங்குள்ள இளைஞர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.

சி.மூ.இராசமாணிக்கம் ஐயாவால் குடியேற்றப்பட்ட கிராமமான சின்னவத்தையில் 2016ல் நிர்மாணிக்கப்பட்ட கல்வி நிலையத்தை மேலும் அபிவிருத்தி செய்வதாக கூறிவந்த நிலையில் அது தற்போது செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.

அக்கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கடந்த காலங்களில் சின்னவத்தை கிராமத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் வாழ்வாதார திட்டங்கள், நாம் தமிழர் பண்பாட்டுக்கலைக்கழகத்திற்கான உதவிகள், கழகங்களிற்கான உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments: