News Just In

1/26/2020 02:24:00 PM

வவுணதீவு ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தின் ப்ரதிஷ்டா மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (26.01.2010) இடம்பெற்றது.

ஆலய கிரியைகள் யாவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றிஸ்வரர் ஆலய பிரதம சிவ ஸ்ரீ.மு.கு.சச்சிதானந்தக் குருக்கள் தலைமையிலான குருக்களால் நடாத்தப்பட்டது.

வரசித்தி வினாயகருக்கு எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை 7 மணி தொடக்கம் இடம்பெற்றது.

வரசித்தி வினாயகருக்கு நேற்றய தினம் கிரியைகள் மற்றும் யாக பூசைகள் ஆரம்பமாகி தொடர்ந்து இன்றையதினம் காலை யாகசாலை பூசைகள் இடம்பெற்று எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது. நாளையதினம் திங்கட்கிழமை மஹா கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது.

இன்று நடைபெற்ற எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்விலும் பூசைகளிலும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.





No comments: