News Just In

1/26/2020 01:49:00 PM

மட்டக்களப்பில் 450 வீடுகள்-1500ற்கு மேற்பட்டோருக்கும், பட்டதாரிகளுக்கும் நியமனம் குறித்து அமல் MP வெளியிட்ட கருத்து


மட்டக்களப்பில் 450 வீடுகள் கட்டப்பட இருக்கினறது, 1500 மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும், அதிகளவான பட்டதாரிகளுக்கு நியமனமும் வழங்கப்படவுள்ளது, என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.

தற்போது நாட்டினுடைய புதிய ஜனாதிபதியாக வந்திருக்கின்ற கோட்டாபய ராஜபக்ஸ அவர்கள் பல புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றார். நாடளாவிய ரீதியில் துரிதமாக வீட்டுத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற அதே வேளையில்,

வடக்கு கிழக்கிற்கு கிடைத்த வரப்பிரசாதம் இந்த 65000 வீடுகள். அதில் ஒரு வீடுகூட கடந்த அரசாங்கத்தில் கட்டப்படவில்லை. அந்த வீடுகளில் முதல் கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கு 1000 வீடுகள் வந்திருக்கின்றது. அதில் ஒரு வீடு 12.8 இலட்சம், அதில் 450 வீடுகள் மட்டக்களப்பில் கட்டப்பட்ட இருக்கின்றது, இந்த 450 வீடுகளுக்கும் எதிர்வருகின்ற வாரத்துக்குள் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவிருக்கின்றது.

அதுமாத்திரமல்ல 14022 வீடுகளின் அனுமதி கிடைக்கப்பெற்றிருக்கின்றது, அதில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 345 வீடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் ஒரு வீடு 6 இலட்சம் என்ற வீதத்தில்.

இதுதவிர ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும் திருத்த வீடுகள் எடுக்கப்படுகின்றன, அத்துடன் வீட்டு கடன் வசதிகள் கொடுக்கப்படுகின்றது. அத்துடன் சபுரிகம என்ற வேலைத்திட்டத்தின் மூலம், மட்டக்களப்பு மாவட்டத்திரு 690 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இவ்வாறான அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்கள் இந்த இரண்டு மாத காலத்திற்குள் முன்னெடுக்கப்படுகின்றது.

எம்மைப்பொறுத்தளவில் இந்த வடகிழக்கு மக்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருக்கின்றார்கள், பெரும்பான்மையான வாக்குகள் வழங்கப்படா விட்டாலும், இந்த ஜனாதிபதியினை கொண்டுவருவதற்கு கணிசமான வாக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு மக்களுக்கான அபிவிருத்தி சார்ந்த வேலைகள் துரிதமாக இடம்பெறுகின்றது, அதுமாத்திரமல்ல நீண்டகாலமாக இருக்கின்ற தீர்வு சார்ந்த விடயம், இதை நாங்கள் முடிந்தளவு முன்னெடுத்து வருகின்றோ.
உரிமை சார்ந்த விடயத்திற்கு சமாந்திரமாக அபிவிருத்தியையும் முன்னெடுப்போம்.

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, கடந்த அரசாங்கத்திலே ரணில் விக்கிரமசிங்க 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை என்று, மட்டக்களப்பில் ஒரு 300 பேருக்கு கிடைப்பதா என்பது சந்தேகம், தற்போது நான் நினைக்கின்றேன் இந்த ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பில் குறைந்தது 1500 மேற்பட்ட பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கின்றது வருகின்ற மாதத்தில்.

அதுமாத்திரம் அல்ல 53000 பட்டதாரிகள் உள்வாங்கப்பட இருக்கின்றார்கள், அதில் மட்டக்களப்பில் அதிகமானவர்கள் வேலை பெற இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: