News Just In

1/29/2020 01:02:00 PM

கிரான்குளம் வாகன விபத்தில் இருவர் படுகாயம்


(மட்டு நிருபர்)
மட்டக்களப்பு கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான்குளம் விவேகானந்தா கல்லூரிக்கு அருகில் பிக்கப் வாகனமும் முச்சக்கர வண்டியும் மோதிக்கொண்டதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின்போது முச்சக்கர வண்யில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

No comments: