News Just In

1/27/2020 06:54:00 PM

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பதவியேற்பு


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா, உத்தியோகபூர்வமாக திங்கட்கிழமை (27.01.2020) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொதுமக்களின் தேவையை உரிய நேரத்துக்குள் நிறைவேற்றிக்கொடுக்கவேண்டும். அதற்குத் தேவையான அர்ப்பணிப்பை உத்தியோகத்தர்கள் வழங்கவேண்டுமென, கடமையேற்கும் சந்தர்ப்பத்தில் உத்தியோகத்தர்களிடம் கேட்டுக் கொண்ட கலாமதி, 30 வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் கட்டியெழுப்பத் தேவையான நடவடிக்கைகளை தன்னால் முடிந்தளவு முன்னெடுக்கப்போவதாகவும் கூறினார்.

இவர், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் உதவி அரசாங்க அதிபராகவும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளராகவும் பணியாற்றிய பின்னர், கிழக்கு மாகாண சபையில் பிரதி பிரதம செயலாளராக நிர்வாகம் மற்றும் பயிற்சியும் ஆலோசனையும் எனும் பதவிகளிலும், கிழக்கு மாகாண சபையின் பேரவை செயலாளராகவும், பணியாற்றுயுள்ளார்.

புதிதாக தலமையேற்க வந்த அரசாங்க அதிபர் கலாமதியை மாவட்ட செயலக சகல உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் வரவேறறனர்.

முன்னதாக செயலகத்தில் அமைந்துள்ள ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ கேதீஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற விசேட பூஜையிலும் கலந்து கொண்டார்.

பின்னர் மட்டக்களப்பு நகரிலுள்ள இஸ்லாம், கிறிஸ்த்தவ பௌத்த தலங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.












No comments: