News Just In

1/28/2020 07:27:00 PM

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி


மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(28) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் V.தவராஜா, கௌரவ அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் திருத்தந்தை A.A.நவரெட்ணம் அவர்களும் மட்டக்களப்பு  கல்வி வலய உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நரம்பியல் சத்திரசிகிச்சை வைத்திய நிபுணர் ஆரணி திவ்யன், வலைப்பந்து விருது பெற்ற திருமதி. சிசிலியா ரஜீவி கனகரெட்ணம், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி, மாறுவேடப் போட்டி, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.


இல்லங்கள் பெற்ற புள்ளிகளின் அடைப்படையில் Concelia இல்லம் முதலாவது இடத்தினையும், Marie இல்லம் இரண்டாவது இடத்தினையும், Casilda இல்லம் மூன்றாவது இடத்தினையும், Freeda இல்லம் நான்காவது இடத்தினையும் பெற்றுக்கொண்டன.








































No comments: