பெண் ஒருவரைக் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தங்க நகைகளை மூன்று இளைஞர்கள் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுளை கயிலகொட பகுதியில் வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இதில் உயிரிழந்தவர் 48 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அங்கப்பன் கெளரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக்க பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
குறித்த பெண் ஆலயத்துக்குச் சென்று வீடு திரும்பிய நிலையில், மூன்று இளைஞர்கள் அவரது வீட்டுக்குள் புகுந்து உயிரிழந்த பண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை அறுக்க முனைந்துள்ளனர்.
குறித்த பெண் கூக்குரல் இட்டதால் , பெண்ணின் கழுத்தை வெட்டியதுடன், நெஞ்சிலும் கத்தியினால் குத்தியதுடன் நகைகளை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரிய வருகிறது.
படுயாமடைந்த குறித்த பெண்ணை பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக பதுளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் நடத்தி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: