ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநரும் தொழிலதிபருமான அனுராதா யஹம்பத் செவ்வாய்க்கிழமை 28.01.2020 ஏறாவூர் நகருக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் அன்றை தினம் அவரது விஜயம் இடம்பெற்றிருக்கவில்லை.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வேறு சில பகுதிகளுக்கு ஆளுநர் அனுராதா யஹம்பத் செவ்வாய்க்கிழமை விஜயம் செய்து நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.
கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் அம்மாகாண சபையின் பிரதித் தவிசாளருமாக இருந்த எம்.எஸ். சுபைரின் அழைப்பின் பேரில் மாகாண ஆளுநர் ஏறாவூருக்கு வருகை தரவுள்ளதாக வெளி மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள் சிலரால் உறுதிப்படுத்தப்படாத செய்தி வெளிடப்பட்டிருந்தது குறிப்பிடப்பட்டிருந்தது.

No comments: