News Just In

1/31/2020 11:28:00 AM

பாடசாலை மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த பிரதி அதிபர் கைது!

தரம் 11இல் கல்விகற்கும் பாடசாலை மாணவிகள் 07 பேரை பாலியல் தொந்தரவு செய்த பிரதி அதிபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி, வதும்பர பிரதேச பாடசாலையின் பிரதி அதிபரே புதன்கிழமை (29) மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவிகளுக்கு சந்தேக நபர் பாலியல் தொந்தரவு செய்ததாக பொலிஸ் அவசர அழைப்பிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த மாணவிகள் மற்றும் வகுப்பாசிரியரிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி, வதும்பர பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments: