அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்ட அரச அதிகாரிகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வது இதன் நோக்கமாகும். எதிர்வரும ஆறு மாத காலப்பகுதிக்குள் இந்த ஆணைக்குழு மூலம் விசேட வேலைத்திட்டங்கள் பல முன்னெடுக்கப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
வெகுஜன ஊடகதுறை அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மகாநாட்டில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும் சட்ட ரீதியிலான அதிகாரத்தை வழங்குவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறது
கடந்த சில வருடங்களாக அரசாங்க அதிகாரிகள் அரசாங்கத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானங்களை மேற்கொண்டால் தாம் தண்டனைக்கு உள்ளாகலாமென்ற அச்சத்துடன் செயல்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் அவ்வாறான நிலை ஏற்படுவதை இதற்கான புதிய சட்டம் தடுதடதுவிடும். இதற்கான சட்ட எல்லைவரை மாஅதிபரினால் தீர்மானிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த அரசாங்கத்தில், அரசியல் பழிவாங்கல் நோக்குடன் விசாரணைக்குட்படுத்தப்பட்ட அதிகாரிகளை விசாரணை செய்த குழுக்களை விசாரணைக்குட்படுத்தி தண்டனைகளை சிபாரிசு செய்யும் அதிகாரத்தை கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றும் விரைவில் அமைக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
அரசாங்க அதிகாரிகளை விசாரித்த விசாரணைக் குழுவில் இடம்பெற்ற அதிகாரிகளுக்கு மூன்றாம் தரப்பிலிருந்து தேவையற்ற அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது என்பது தொடர்பாக இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கவனம் செலுத்தும். நிதிக் குற்றச்சாட்டுகள் விசாரணைப் பிரிவின் தலைவரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி வைத்யலங்கார அவ்வாறான மூன்றாம் தரப்பு சக்திகள் பற்றி அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்றும் கூறினார்.
இந்த விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்த அதிகாரிகள் தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்களா? அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை மீறினார்களா? என்பதையும் மேற்படி ஆணைக்குழு கவனத்திற்கொள்ளவுள்ளது.
சாதாரண விசாரணை ஆணைக்குழுவை விட அதிகளவு அதிகாரங்களைக் கொண்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை, விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்வுள்ளது என்றும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேலும் தெரிவித்தார

No comments: