News Just In

12/11/2019 12:00:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற வானிலையின் காரணமாக வெள்ளப்பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ஏ.சி.எம். சியாத் தெரிவித்தார்.

மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தலில் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தயாரித்த பாதிப்பு விடயங்களுக்கு அமைவாக இந்த நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

முதற்கட்டமாக கோறளைப்பற்று கிண்ணையடி பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு நிவாரண விநியோகம் கிண்ணையடி பொது மண்டப கட்டிடத்தில் அரசாங்க அதிபர் உதயகுமாரினால் செவ்வாய்க்கிழமை 10.12.2019 வழங்கி வைக்கபட்டது.

மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வெள்ளப் பாதிப்பை எதிர்கொண்டு சிரமப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

No comments: