நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து (11.12.2019) அடுத்த சில நாட்களில் தற்காலிகமாக சிறிது குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமணடலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் ,தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75-100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
12/11/2019 10:30:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
வெள்ளப் பாதிப்பு
/
வெள்ளம்
/
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை-பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவும்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை-பொதுமக்கள் விழிப்புடன் செயற்படவும்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: