குறித்த வழக்கு கல்முனை நீதிமன்ற நீதிவாதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு இரு வேறு சந்தர்ப்பங்களில் நேற்று (10) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது கைதான 13 பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.
பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு சாய்ந்தமருதில் உதவி ஒத்தாசை வழங்கிய சந்தேக நபர்களும் இதன்போது கடும் பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வரப்பட்டனர்.

No comments: